வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவாகி உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, 35வது மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா டான்போஸ்கோ நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், தமிழகத்தின் 35வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
Discussion about this post