நம்மில் பலருக்கு முகத்தில் எண்ணெய் வழியும் வழக்கம் இருப்பது எதார்தம்….
இதனை எப்படி சரி செய்வது?
முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை சிறுது குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதை விட கடலை மாவு பூசி கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.
இதற்கு அடுத்தபடியாக தக்காளி எடுத்து கொண்டு அதன் சாற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை நீங்கும் . இது போன்று வீட்டில் உள்ள எளிய பொருட்களை முலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை சரித்து செய்து முகத்தை அழகாய் வைத்துக் கொள்ளலாம்
Discussion about this post