வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டியை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவில் தொழில் தொடங்கும் சுழல் தற்போது சுலபமாகியுள்ளதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், வரி கட்டமைப்பு குறித்து தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்திவருவதாக கூறினார். ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதி மத்திய அரசுக்கு மாற்றப்படுகிறது என்று விளக்கமளித்தார். திருடன் என விமர்சித்த ராகுல் காந்திக்கு உரிய பதிலடி கிடைத்துள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி குறித்து பேசுவதற்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Discussion about this post