வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை காலை 8.30 மணி முதல் மதியம் 1. 30 மணி வரை மட்டுமே இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரத்தில் 46 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும்,இரண்டாயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும், பைக் பேட்ரோல்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.