இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளருடனான ஆலோசனை கூட்டத்திற்கு கால அவகாசம் வழங்க கோரி, டிவிட்டர் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே மாதம் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தங்கள் நிறுவன பிரதிநிதி, தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி டுவிட்டர் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post