மத்திய அரசு விதித்த தடையால், டிக் டாக் நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக், டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், அந்த நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மட்டும், சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பை சந்திக்கும் என, சீன அரசின் ஊடகமான தி குளோபல் டைம்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது. டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் ஆதாரமாக இந்தியா கருதப்படவில்லை என்றாலும், அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த தடையால், பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தைகளில் செய்துள்ள சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில், பெரும் இழப்பை சந்திக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post