25ஆம் தேதி முன்பதிவு மையங்கள் இயங்காது : ரயில்வே அறிவிப்பு

25 ஏப்ரல் 2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்காது

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக வருகின்ற 2021 ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை அன்று, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு மையங்களும் அன்றைய தினம் இயங்காது.

டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் நடப்பு முன்பதிவு கவுண்டர்கள் (current reservation counters) வழக்கம் போல் செயல்படும்.

Exit mobile version