பழம்பெரும் நடிகரான தியாகராஜ பாகவதரின் 59-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கருப்பு வெள்ளை காலங்களில் தமிழ் திரையுலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவரின் பாடல்கள், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
14 படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர், ஹரிதாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். இப்படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. பின்னாளில் அதிக அளவு வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
தனது நடிப்பாலும், பாடல்களாலும் கொடிகட்டி பறந்த தியாகராஜ பாகவதர் தனது 49-வது வயதில் மஞ்சள் காமாலை நோயின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் 59-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Discussion about this post