வெப்பசலனம் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி, மணல்மேடு, தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தலா 10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Discussion about this post