வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிழவுவதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
Discussion about this post