தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் பகுதியில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post