சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவியருக்கு 3 வகையான சிறப்பு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மகளிர் தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவியருக்கு 3 வகையான சிறப்பு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த 10 சிறந்த பெண் ஆளுமைகளின் பெயர்களில், பல்வேறு பல்கலைக்கழகங்களில் சிறப்பு இருக்கைகள் உருவாக்கப்படும் என்றும், பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
Discussion about this post