சென்னை திருமங்கலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆனந்தகுமார் என்பவர் தனது காரை காணவில்லை என கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேபோல், அண்ணாநகர் பகுதியில் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகன காணவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருமங்கலம் குற்றவியியல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். வாகனங்கள் திருடப்பட்ட இடத்தில் இருக்கு சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை திருமங்கலம் காவல்துறையினரின் வாகன சோதனையின் போது காரை நிறுத்தாமல் சென்றவர்களை விரட்டி பிடித்தனர். காரில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்க காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் கார் மற்றும் இருசக்கர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறில்ராஜ், பாலாஜி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்து ஒரு கார் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Discussion about this post