இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆவணங்களை வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மூன்று பேரையும், வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் நடைபெற்ற குண்டு வெடிப்பையடுத்து, அந்நாட்டு ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3ம் தேதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில், விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், சிற்றுண்டிசாலை மண்டபத்தில் தியாகி திலீபனின் புகைப்படம் இருந்த புகாரின் அடிப்படையில், உணவக உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் மூன்று பேரையும் முழுமையாக விடுவிக்கக்கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை கையில் ஏந்தியவாறு அமைதியான் முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Discussion about this post