இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் தமிழகம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் புதிதாக 3 கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கேரளம் மற்றும் அந்தமானில் உள்ள டார்னியர் விமான கண்காணிப்பு படைப் பிரிவில் கூடுதல் விமானங்களை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக அதி நவீன வசதிகளுடன் கூடிய கடற்படைக்கு புதிதாக 12 டார்னியர் ரக விமானங்கள் கொள்முதல் செய்வதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விமானங்கள் விரைவில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், தமிழகம் மற்றும் குஜராத்தில், கடற்படையின் 3 புதிய விமானப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்திய கடற்பகுதிகள் 24 மணி நேரம் கண்காணிப்படும் என கூறப்படுகிறது.
Discussion about this post