பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களில் வேகமாக பரவியது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள மேலும் 2 கட்டிடங்களிலும் தீப்பிடித்தது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், 51 தீயணைப்பு வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர்.