மக்களவைத் தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குபதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றிற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறிய அவர் தேர்தல் கண்காணிப்புக்காக 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
Discussion about this post