யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓடிசா, மேற்குவங்க மாநிலங்களில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனிருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஒடிசாவிலும், மேற்குவங்கத்திலும் புயல் சேத விவரங்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றன. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 500 கோடி ரூபாயும், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு 500 கோடி ரூபாயும் முதற்கட்ட நிவாரண உதவியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புயல் சேத விவரங்களை மத்திய குழு விரைவில் சேகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post