தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 562 பேரில், 941 பேர் ஆண்கள், 621 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ((NEXT))
சென்னையில் அதிகபட்சமாக, ஆயிரத்து 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையின் ஒட்டுமொத்த பாதிப்பு 23 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் புதிதாக 134 பேருக்கும், திருவள்ளூரில் 57 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 18 பேரும், தூத்துக்குடியில் 26 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 528 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது. 52.75 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. 15 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post