அதிமுக சார்பில் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டதால், மீண்டும் விண்ணபிக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post