நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 631 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால், ஒரே நாளில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 656 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 127 புள்ளி 70 அடியாகவும், நீர் இருப்பு 4 ஆயிரத்து 201 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post