தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள குடிமராமத்து பணிகள் 3 மாதங்களில் முடிவடையும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு இயந்திரம் பொருத்திய மூன்று சக்கர விலையில்லா வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். மேலும் பிற துறைகள் மூலமாகவும் நலத்திட்ட உதவிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளுக்காக 13 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.