178 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உலக வர்த்தக நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் பிரபல சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் நிறுவனம் திவாலடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த நிறுவனம் ஆயிரத்து 700 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் பயண ஏற்பாடுகளை செய்திருந்த லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தாமஸ் குக் நிறுவனம் பிரிட்டன் அரசின் உதவியை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க தாமஸ் குக் நிறுவனத்தின் முடிவு உலக வர்த்தக நிறுவனங்கள் பலவற்றையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Discussion about this post