திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாநிதியின் மறைவை ஒட்டி, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், கஜா புயல் நிவாரணப் பணிகள் காரணமாக திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக கருதி இன்று விசாரிக்க இருந்தது. இந்தநிலையில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post