தி.மு.க. கூட்டணியில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் இல்லை என துரைமுருகன் பேசியிருந்தது வைகோ, திருமாவளவன் மட்டுமின்றி அவர்களது கட்சியினரையும் அதிருப்தியடைய செய்தது. இது தொடர்பாக வைகோவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தன்மானம் தான் முக்கியம் என்றும், கூட்டணி குறித்து தி.மு.க. தலைவர் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இப்பிரச்னைகளுக்கு இடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
முன்னதாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தி.மு.கவுடன் தோழமையில் உள்ள தாங்கள் கூட்டணியாக மாற விரும்புவதாக தெரிவித்தார்.
Discussion about this post