மக்களவை தேர்தலில் 3ம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும்,18-ந் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் 3-வது கட்ட தேர்தல் நாளை 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளும் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளும் அடங்கும்.
இதேபோல மராட்டியத்தில் 14 தொகுதிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து 117 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.
3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி மட்டுமல்லாது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார்.
Discussion about this post