மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி வெளியாகிறது மார்வெல்லின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமான “கேப்டன் மார்வெல்” . இந்த படம் முடிந்த பிறகு வரும் காட்சிகளை மிஸ் பண்ணிராதீங்க என்றுள்ளார் டிஸ்னியின் இந்தியாவின் தலைமை அதிகாரியான பிக்ரம் துக்கல்.இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் கேப்டன் மார்வெல் படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகைகள் தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால்,ரகுல் பிரீத்தி சிங், பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நான்கு நடிகைகளும் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகைகள் என்பதை ஒரே குரலில் ஒப்புக்கொண்டனர். மேலும் கேப்டன் மார்வெல் படம் மற்றும் டிரைலர் பார்த்தவுடன் பற்றிய மனதில் தோன்றிய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது அவர்களிடம் அவெஞ்சர்ஸ் படம் தமிழில் எடுக்கப்பட்டால் எந்த ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
அப்போது, அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய்யின் பெயரை சமந்தா மற்றும் காஜலும் முன்மொழிய, சூர்யா தான் தன்னுடைய சாய்ஸ் என ரகுல் பிரீத்தி சிங் கூறியுள்ளார். ஹல்க் கதாபாத்திரத்திற்கு ஆர்யாவை சமந்தாவும், விஷாலை காஜலும் தங்களுடைய சாய்ஸாக கூறினார். மிக முக்கியமான தோர் கதாபாத்திரத்திற்கு தமன்னா தன்னுடைய விருப்பமாக மகேஷ்பாபு, சூர்யா என சொல்ல தன் தேர்வாக சொல்ல, அதற்கு காஜல் அகர்வால் அஜித் தான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என கூறினார். இதனை அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். மேலும் கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரத்திற்கும் அஜித் தான் பொருத்தமானவர் என காஜல் அகர்வால் சொல்ல அந்த இடமே ஆர்ப்பரித்தது. மேலும் இந்தியாவின் சார்பில் பாகுபலியை அவெஞ்சர்ஸ் டீமுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற அதி அற்புதமான யோசனையை நான்கு நடிகைகளும் கூறியுள்ளனர்.
Discussion about this post