தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் இரவில் பனிப்பொழிவு நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இமயமலைப் பகுதியில் நிலவும் குறைந்த அளவு வெப்பம் காரணமாக நாடு முழுவதும் குளிர் காற்று வீசுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்னும் 4 நாள்களுக்கு இரவில் கடுமையான பனிபொழிவுடன், குளிர் காற்றும் வீசும் எனவும் காலை 9 மணி வரைக்கும் பனிப்பொழிவு நீடிக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் உறைபனி நிலவும். பகல் நேரங்களில் வறண்ட வானிலை காணப்படுவதுடன் காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post