சபரிமலை விவகாரத்தில் புனிதத்தை கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்துக் கோவில்களிலும் அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், ஆனால், அந்த கோவில்களின் புனிதத்தைக் கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தனது கணவரின் மதமான சவுராஷ்டிர மதத்தை பின்பற்ற குழந்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என ஸ்மிருதி ரானி தெரிவித்தார்.
Discussion about this post