ரயில்வே வேலைகளில் சேருவதற்கு RRB தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். அதன்பின் நேர்முக தேர்வு நடைபெற்று வேலை வழங்கப்படும். ஆனால் இனி RRB தேர்வு நடத்தப்பட மாட்டது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
RRB தேர்வுக்கு பதிலாக UPSC தேர்வு வாரியம் , ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.
UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு மூலம் ரயில்வேயின் 5 பிரிவுகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுபவர். இந்த தேர்வில் வெற்றிப்பெறுபவர்கள் ரயில்வேயின் IRMS எனப்படும் இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனத்திற்கு சொந்தமான எந்த துறைகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர்.
Discussion about this post