25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுதும் 42 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு உள்ள பள்ளிகளில் 1ல் இருந்து 5ம் வகுப்பு வரையும், 6ல் இருந்து 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தனித்தனி கட்டடத்தில் இயங்கி வரும் போது, ஒரேஇடத்தில் தனித்தனியாக சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சத்துணவு அமைப்பாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒரே இடத்தில் 2 சத்துணவு மையங்கள் இயங்கி வந்தால் அதை ஒரே மையமாக மாற்றி இயங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் சத்துணவு அமைப்பாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதை சரிசெய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post