கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டமாக மாறிய சென்னை!

சென்னை மாநகராட்சி எடுத்த சீரிய நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டமாக சென்னை மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது நோய் பரவல் குறைந்துள்ளது. பாதிப்புகள் அதிகம் உள்ள தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து வந்த சென்னை மாநகராட்சி, அப்பகுதிகளில் நோய் தொற்று குறைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேலும், அந்தப் பகுதிகளில் தினசரி, கிருமிநாசினி தெளிப்பது, காய்ச்சல் முகாம்கள் நடத்துவது என தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டமாக தலைநகர் சென்னை மாறியுள்ளது.

Exit mobile version