ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பாகிஸ்தானிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். அங்குள்ள பந்தல்கண்ட் மாவட்டத்தில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார். அதற்காக ராணுவ வீரர்கள் சரியான நேரத்திற்கு காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இச்சம்பவத்தில் தகுந்த பதிலடி கொடுப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் இந்திய மக்களின் கோபத்தை தம்மால் உணர்ந்து கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்தார். தாக்குதலுக்கான சரியான நேரத்தை ராணுவம் முடிவு செய்யும் எனவும் மோடி கூறினார்.
Discussion about this post