27 ஆண்டுகளுக்கு முன்பு சண்டை போட்டு பிரிந்த காதலர்கள் அதே இடத்தில் மீண்டும் சந்தித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் ஜேசன் ராய் என்ற நபரும் வலிரி ஸ்னிட் என்ற பெண்ணும் கடந்த 1992 ஆம் ஆண்டு நண்பர்களாகி பின்பு காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்பு ஒரு உணவகத்தில் இருவரும் தங்கள் வருங்காலத்தை குறித்து விவாதிக்கும் போது இருவருக்கும் இடையே கடுமையாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் காதலை முறித்துக்கொள்ள முடிவு எடுத்து பிரிந்துள்ளனர். சில வருடங்கள் கடந்து இருவரும் வெவ்வேறு நபர்களை மணந்து கொண்டனர். ஆனால் சில வருடங்களில் தங்களது துணையை இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போதுதான் இருவரின் மனதிலும் மலர்ந்த காதல் மறையவில்லை என்று இருவருக்கும் தோன்றியுள்ளது. பின்னர் சமூக வலைதளங்கள் மற்றும் நண்பர்கள் மூலம் இருவரும் சந்தித்து தங்களின் காதலை புதுப்பித்துக் கொண்டனர். இதனைதொடர்ந்து 27 வருடங்களுக்கு சண்டை போட்டு் பிரிந்த இடத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Discussion about this post