தூத்துக்குடி மாவட்டத்தில் முகக் கவசம் தயாரிப்பில் ஈடுபடும் தையல் தொழிலாளர்கள், இதன் மூலம் போதிய வருவாய் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றம் சுகாதார பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் மூன்று அடுக்கு என பல்வேறு மாடல்களில் முகக் கவசங்கள் தயார் செய்யப்படுகிறது. ஒரு முகக் கவசத்தின் விலை 8 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் பாதிக்கபட்டுள்ள நிலையில், முகக் கவசம் தயாரிப்பால் தங்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதாக தையல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post