வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பச் சூழல் காரணமாக, கணவர் கேரள மாநிலத்தில் வேலைக்குச் செல்லவே வீட்டில் தனியாக இருக்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காக, கொடுத்த தொலைபேசி பெண்ணின் எண்ணை வைத்து வங்கி ஊழியர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து, பேசி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, சிவகார்த்திகேயன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி, அடிக்கடி தன் நண்பர்களுடன் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில், தனியார் வங்கி துணை மேலாளர் முத்து சிவகார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சதீஷ் பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
Discussion about this post