2011 ஆம் ஆண்டு கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனை கொன்ற வழக்கில் திவாகரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் அவரது காதலர் எழில் ஆகியோரை திவாகர் என்பவர் அவரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்தும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி குற்றவாளி திவாகர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
Discussion about this post