தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை 51 அடியை எட்டியுள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 57 அடி முழு கொள்ளளவு கொண்ட மஞ்சளாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 494 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post