தேனியில் உள்ள சோத்துப்பாறை அணை 18 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக 55-வது நாளாக தொடர்ந்து நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவ மழையால், 126 புள்ளி 37 கன அடி கொள்ளளவு கொண்ட சோத்துப்பாறை அணைக்கு, நீர்வரத்து 55 கன அடியாக உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் நீர்வரத்து முழுமையாக வெளியேற்றப்படுகிறது. 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடந்த 2001-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணை, 18 ஆண்டுகளில் பல முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து 55-வது நாளாக அணையில் இருந்து நீர் நிரம்பி வழிவது இதுவே முதன்முறை என்பதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அணையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் நீர் நிரம்பி வழிவதை கண்டு ரசித்து செல்கின்றனர்.
Discussion about this post