மதுரை வைகையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை மீட்க உதவிய, இலங்கை அகதிகளுக்கு பொதுமக்கள் உள்பட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நண்பர்களுடன் வைகை ஆற்றிற்கு குளிக்கச் சென்ற சங்கர், நீரில் அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், கடலில் மூழ்கி முத்தெடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள 5 மீனவ இளைஞர்களை மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தினர். துரிதமாக, செயல்பட்ட இளைஞர்கள் சில நிமிடங்களிலேயே சங்கரின் உடலை மீட்டெடுத்தனர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு உதவிய இலங்கை அகதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Discussion about this post