கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சட்டு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை டேனியல் ரிச்சட்டு செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய குழுவினர் கடந்த சனிக்கிழமை முதல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ததாகவும் பாதிப்புக்களை கணக்கிட்டு மக்கள் நிலைமையையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும், பாதிக்கப்பட்ட வீடுகளையும், மரங்களையும் பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..மேலும் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பலரது வாழ்வாதாரம் பாதுக்காக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசு தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர் மத்திய குழுவினர் பல்வேறு துறையில் இருந்து வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனைவருமே ஆய்வு செய்து பார்வையிட்டதாகவும் டெல்லி சென்று விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post