இந்தியாவில் உள்ள அணைகளை புனரமைக்கவும் மேம்படுத்தவும் உலக வங்கி 960 கோடி ரூபாயை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரளா,மத்தியபிரதேசம், ஓடிஷா, தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 220 அணைகள் உள்ளன. இந்த அணைகளை மேம்படுத்தவும் புனரமைப்பதற்காகவும் உலக வங்கி 137 அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 960 கோடியாகும். விவசாயம் மேம்பட அணைகளின் பங்கு முக்கியம் என்பதால் தற்போது உலக வங்கியிடமிருந்து 960 கோடி பெற்றுள்ளதாக இந்திய பொருளாதார கூடுதல் செயலாளர் சமீர் கேர் தெரிவித்தார். தற்போது இந்தியாவின் பல இடங்களில் பருவமழை பொய்த்து வருவதன் காரணமாக விவசாயத்திற்கு அணைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post