நலகொண்டா மாவட்டத்தின் விஞ்சமூரூ கிராமத்தை சேர்ந்தவர் தேவலய்யா. கள் இறக்கும் தொழிலாளியான இவர், வழக்கம்போல பனைமரம் ஏறி கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்படவே தேவலய்யாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் இடுப்பில் கட்டியிருந்த கயிற்றில், தலைகீழாக தொங்கியது. தேவலய்யாவின் உடல் அந்தரத்தில் தொங்குவதைக் கண்ட சக தொழிலாளர்கள், உடலில் கயிற்றைக் கட்டி கீழே இறக்கினர். பனை மரத்தின் மேலேயே, கள் இறக்கும் தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post