விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் மங்கலத்தை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. மயில், யானை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் இருப்பது போன்ற சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், காகிதக் கூழ், இயற்கை வண்ணங்கள் மூலம் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டது போன்று இந்த ஆண்டும் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post