பூதமங்கலம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பூதமங்கலம் கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மர விதைகளை கொண்டு 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு இறுதி பணியாக வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரமிக்க வைக்கும் விநாயகர் சிலைகள் மக்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு விற்பனை சிறப்பாக இருக்கும் என்று சிலை கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
Discussion about this post