இந்த ஆண்டு மழை பொய்த்து தமிழகத்தில் வறட்சி நிலவும் நிலையில், மழை வேண்டி, திருவண்ணாமலை அருகே சாமிக்கு படையலிட்டு கொடும்பாவி எரித்த நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் சாத்தமங்கலம் ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, சமைத்து மழை வேண்டி கன்னிமார் சுவாமிக்கு படையலிட்டனர். பின்னர் ஒப்பாரி வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கொடும்பாவியை பாடைகட்டி எடுத்துச் சென்ற அவர்கள், மேளதாளங்களுடன் அதை எரித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மழை வர வேண்டும் என்றும், நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். அறிவியல் பூர்வமாக இது போன்ற செயல்கள் ஏற்புடையதல்ல என்று கருதப்பட்டாலும், வறட்சியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையை தரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Discussion about this post