பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த எருமப்பட்டியைச் சேர்ந்தவர் பூங்கோதை. இவர், எருமப்பட்டி, அலங்காநத்தம், தூசூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற்றுத் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பூங்கோதையை கைது செய்த நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Discussion about this post