வெப்பதில் தவிக்கும் ஐரோப்பா!
பருவநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் பனிப்புயல், வெள்ளம், சூறாவளிபுயல், மேகவெடிப்பு, கடுமையான வெயில் போன்ற காரணங்கள் இயல்புக்கு மீறிய அசாதாரணமான வானிலை நிலவுகின்றது. இந்த மாற்றத்தினால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலைவீச்சு அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வெப்ப அலைவீச்சால் கடந்த ஆண்டு ஐரோப்பாவில் 61,000-க்கும் அதிகமானோர் இறந்தனர். ஏற்கனவே அங்கு அசாதாரணமான வெப்பநிலை நிலவி வரும் நேரத்தில் இனிவரும் காலங்களில் 104 டிகிரியில் இருந்து 113 டிகிரி வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்கப்படுகின்றது.
சிகப்பு எச்சரிக்கை!
இதில் இத்தாலியின் முக்கிய நகரங்களான ரோம் மற்றும் சிசிலி உள்ளிட்ட 23 நகரங்களுக்கு வெப்ப அலைவீச்சின் காரணமாக ’சிகப்பு எச்சரிக்கை’ விடப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையானது பகல் 11 மணி அளவில் தொடங்கி மாலை ஆறு மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும் சில நாடுகளில் வறட்சியும் காணப்படுகின்றன. அதில் ஐரோப்பா மற்றும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் அளவுக்கு அதிகமாக வெப்பநிலை நிலவிவருகின்றன. மேலும், இந்த வெப்ப அலைவீச்சால் அந்நாட்டு மக்கள் அம்மை, சிறுநீர் கடுப்பு, வறட்சி போன்ற பலவகை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொள்ள உள்ளனர். இந்த நிலை குறித்து ஐநா எச்சரித்து உள்ளது. அதாவது, இதுபோன்ற காலசூழ்நிலையை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் வெப்பமானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது ஒரு அவசரநிலை என்றும் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெப்ப அலைவீச்சில் உலகம் முழுவதும் சுமார் 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post