மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ளது.
நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருவள்ளூர், கரூர், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்பட 14 இடங்களில் 520 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட 11 மொழிகளில் எழுதலாம் எனவும்; தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வை எழுத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post