மஹாராஷ்டிராவில் 30 சதவீத மக்கள் தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர் கல்வி மற்றும் அரசு வேலை உள்ளிட்ட துறைகளில் 16 சதவீத இடஒதுக்கீடு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்க நவம்பர் வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதனை நிராகரித்த மராத்தா சமூகத்தினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் இந்திய கிசான் சபா என்ற விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post